கோவை மாநகர் மாவட்டம், சிங்காநல்லூர் பகுதி கழகம், 54-வது வட்ட கழகம் மற்றும் இந்திய அஞ்சல் துறை இணைந்து இலவச ஆதார் பதிவு மற்றும் திருத்த முகாம் நடத்தியது.
பகுதிக் கழக செயலாளர் சிங்கை சிவா, 54-வது வட்டக் கழக செயலாளர் ஆனந்தகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு முகாமை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான நா.கார்த்திக் துவக்கி வைத்தார். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர்.
பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர் சசிகுமார், தலைமைக் கழக பேச்சாளர் சிங்கை சௌந்தர், போனஸ்பாபு, தொண்டரணி துணைத்தலைவர் வசந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.