Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 5,61,486 பேருக்கு சிகிச்சை முதல்வருக்கு நன்றி தெரிவித்த...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 5,61,486 பேருக்கு சிகிச்சை முதல்வருக்கு நன்றி தெரிவித்த பயனாளிகள்

மக்களைத் தேடி மருத்தவத் திட்டத்தை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட பயனாளிகள் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ், நாளதுவரை உயர் இரத்த அழுத்த சிகிச்சை 2,80,752 நபர்களுக்கும், நீரிழிவுநோய் சிகிச்சை பரிசோதனை 1,36,453 நபர்களுக்கும், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் இரண்டு உள்ளவர்களுக்கான பரிசோதனை 1,14,201 நபர்களுக்கும், நோய்த்தடுப்பு சிகிச்சை 10,872 நபர்களுக்கும், இயன்முறை மருத்துவச் சிகிச்சை 10,522 நபர்களுக்கும், சிறுநீரக சிகிச்சை 7 நபர்களுக்கும், புற்றுநோய் சிகிச்சை 3,397 நபர்களுக்கும், உயர் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்ட 5,282 நபர்கள் என மொத்தம் 5,61,486 நபர்கள் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

மேலும், மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை வழங்கி சிறப்பாக பணியாற்றிய இடைநிலை சுகாதார பணியாளர்கள், பெண் சுகாதார தன்னார்வலர்கள் (ம) சுகாதார ஆய்வாளர்கள், இயன்முறை சிகிச்சையாளர்கள், நோய் ஆதரவு சிகிச்சையாளர்கள், தொற்றுநோய் செவிலியர்கள் என மொத்தம் 14 நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் இத்திட்டத்தின் நான்காம் ஆண்டை துவக்கி விழாவில், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்ற சித்ரா கூறியதாவது:
நுரையீரல் பாதிப்பில் உள்ள எனக்கு பெல்லம்பள்ளி துணை சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மாதந்தோறும் நேரடியாக எங்கள் வீட்டிற்கே வந்து உடல்நிலையை பரிசோதனை செய்து ரூ.3 ஆயிரம் மதிப்பிலான மாத்திரைகளை வழங்கி வருகிறார்கள். இதனால் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முதல்வருக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
பயனாளி ஜெயம்மா கூறியதாவது:

எனக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு பரிசோதனைக்காக சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடிவதில்லை. இந்நிலையில் எனக்கு கங்கலேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறை பணியாளர்கள் ஆகியோர் எங்கள் வீட்டிற்கு மாதந்தோறும் வருகைபுரிந்து மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ், எனக்கு சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்த பரிசோதனை மேற்கொண்டு, மருந்து மாத்திரைகளை இலவசமாக கொடுத்து வருகிறார்கள். இத்திட்டத்தை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img