fbpx
Homeபிற செய்திகள்கோவையில் நாளை 5 மாணவர்களுக்கு கல்வி உதவித் திட்டம் தொடக்க விழா

கோவையில் நாளை 5 மாணவர்களுக்கு கல்வி உதவித் திட்டம் தொடக்க விழா

கோவையில் கோவை வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கங்கள் மற்றும் சி.ஆர்.எஸ் நினைவு அறக்கட்டளை சார்பாக 5 மாணவர்களுக்கு கல்வி உதவி திட்டம் தொடக்க விழா மற்றும் சி.ஆர்.எஸ் விருது வழங்கும் விழா நாளை (1ம் தேதி) நடக்கிறது.

இதுகுறித்து ராக் அமைப்பின் இயக்குநர் சவுந்தர்ராஜன் கமிட்டி மெம்பர் சவுந்தர்ராஜன், டாக்டர் சுந்தர ராமன், டாக்டர் வரதராஜன், சிவஞானம் ஆகியோர் கூறியதாவது: கோவை வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கங்கள் சிஆர்எஸ் நினைவு அறக்கட்டளை குழு மற்றும் ராக் அமைப்பு இணைந்து இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளன.

மறைந்த சி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் கனவை நினைவாக்கும் வகையில் ஏழை எளிய மாணவர் களுக்கு கல்வி உதவித் திட்டம் தொடங்கப்படுகிறது. அவரது நினைவை கௌரவிக்கும் வகையில் ஒரு அறக் கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 5 மாணவர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர்.

அவரது நினைவைப் போற்றும் வகையில் பள்ளி கல்வி முதல் முதுநிலை கல்லூரி கல்வி வரையிலான நீண்ட கால கல்வி உதவித் தொகை மற்றும் வழிகாட்டி திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் துவக்கவிழா ஏப்ரல் 1ம் தேதி மாலை 5 மணிக்கு கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் அமைந்தி ருக்கும் மணி உயர்நிலைப்பள்ளி நானி கலையரங்கில் நடைபெறுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மாணவர்களுக்கு விழாவில் கல்வி உதவி தொகை வழங் கப்படும். இந்த கல்வி உதவித் தொகை பெறும் மாணவர்கள் 25க்கும் மேற்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கல்வி உதவி

படிப்பு திறன் கொண்ட மாணவர் நல்ல பண் புகளுடன் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற வேட்கை வாடகை வீடு மற்றும் கழிவறை, வீட்டு உபயோக சாதனங்கள் முதலான எந்த அடிப்படை வசதிகளுமற்ற குடிசை வீடுகளில் வசிக்கும் மாணவர்கள் உடல் ஊனமுற்ற குடும்ப உறுப்பினர்கள், பெற்றோர்கள் இல்லாத மற்றும் ஒரு பெற்றோர் மட்டுமே உள்ள மாணவர்கள் பல குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் கூலி வேலை செய்யும் பெற்றோர்கள், ஒரு ரூபாய் கூட சேமிப்பு இல்லாத பெற்றோர்கள், புத்தகம் சீருடைகள் வாங்கிட பள்ளிக் கட்டணம் கட்ட பணம் இல்லாத பெற்றோர்கள் கொண்ட மாணவர்கள் என்று பல் வேறு அம்சங்களின் அடிப்படையில் கல்வி உதவி பெறும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பிரிகால் நிறுவனத்தின் நிறுவனரும் விழா முதன்மை விருந்தினருமான விஜய்மோகன் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவார்.

விழாவின் போது மற்றுமொரு இணை நிகழ்வாக சிறந்த நிறுவன உருவாக்கத்திற்கான சிஆர்எஸ் விருது சோஹோ நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்புவுக்கு வழங்கப்படுகிறது. மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img