fbpx
Homeபிற செய்திகள்இந்தியா - நேபாள் சர்வதேச கராத்தே, சிலம்பம் போட்டியில் கோவை மாணாக்கர்கள் சாதனை 32 தங்கம்...

இந்தியா – நேபாள் சர்வதேச கராத்தே, சிலம்பம் போட்டியில் கோவை மாணாக்கர்கள் சாதனை 32 தங்கம் உள்பட 60 பதக்கங்கள் குவித்தனர்

நேபாள நாட்டின் பொக்ரா நகரில், ஸ்கூல் கேம்ஸ் அண்ட் ஆக்டிவிட்டி டெவலப்மெண்ட் பவுண்டேஷன் சார்பில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற இந்தியா – நேபாள் சர்வதேச கராத்தே, சிலம்பம் மற்றும் யோகா போட்டியில் கோவை மாணாக்கர்கள் அபார சாதனை படைத்துள்ளனர்.

இந்த போட்டியில் இந்தியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஜே.கே.டி.சி கல்ச்சுரல் அகாடமி மாணவர்கள், தலைமை பயிற்சியாளர் சிகான் சிரில் வினோத் தலைமையிலும், பயிற்சியாளர்கள் சஞ்சய் மற்றும் நிர்மல் குமார் வழிகாட்டுதலிலும் பங்கேற்றனர்.

கார்மேல் கார்டன் பள்ளி, சென். ஜோசப் பள்ளி, கென்னடி மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் ஜேகேடிசி அகாடமியைச் சேர்ந்த 47 மாணவ, மாணவிகள் கராத்தே, சிலம்பம் மற்றும் யோகா போட்டிகளில் பங்கேற்று மொத்தம் 60 பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்தனர். இதில்,32 தங்கப் பதக்கங்கள், 24 வெள்ளிப் பதக்கங்கள், 4 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.

கராத்தே போட்டியில் மட்டும் 50 பதக்கங்கள் வென்றுள்ளனர். அதில் 26 தங்கம், 21 வெள்ளி, 3 வெண்கலம் பெற்றுள்ளனர். சிலம்பம் போட்டியில் 4 தங்கம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கமும், யோகா போட்டியில் 2 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களும் வென்றுள்ளனர்.இந்த போட்டியில் வெற்றி பெற்று கோவை விமான நிலையம் வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள், உறவி னர்கள் மற்றும் நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்து பாராட்டினர்.
இதனைத் தொடர்ந்து ஜேகேடிசி கல்ச்சுரல் அகாடமி தலைமை பயிற்சியாளர் சிரில் வினோத் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எங்கள்1 மாணவர்கள் ஆசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் மேலும் பெருமை சேர்ப்பார்கள்,” என்றார்.

மேலும், இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்த கட்டமாக தாய்லாந்து மற்றும் மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய சங்கத்தின் நிறுவனத் தலைவர் சிவம் தாகூர், மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img