fbpx
Homeபிற செய்திகள்பி.எஸ்.ஜி. இயன்முறை மருத்துவக் கல்லூரி 22வது பட்டமளிப்பு விழா சிறந்த மாணவர்களுக்கு விருது

பி.எஸ்.ஜி. இயன்முறை மருத்துவக் கல்லூரி 22வது பட்டமளிப்பு விழா சிறந்த மாணவர்களுக்கு விருது

கோவை பி.எஸ்.ஜி, இயன்முறை மருத்துவக் கல்லூரியின் 22வது பட்டமளிப்புவிழா நேற்று (19ம் தேதி) பிஎஸ்ஜி ஐஎஸ்எம் & ஆர் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை, பிசியோகேர் பிசியோதெரபி சென்டர் இயக்குநரும் முதன்மை ஆலோசகருமான டாக்டர் ஹம்ஸ்ராஜ் கலந்து கொண்டார்.
அவர் சென்னையில், விளையாட்டு மற்றும் எலும்பியல் இயன்முறை மருத்துவராக 30 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்டவர் ஆவார். ராகுல் டிராவிட் உள்ளிட்ட உயர்தர கிரிக்கெட் வீரர்களுக்கு சிகிச்சை அளித்ததோடு, இந்தியா முழுவதும் 300க்கும் மேற்பட்ட இயன் முறை மருத்துவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார்.

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் முனை வர் பட்டம் பெற்றுள்ள இவர், இந்திய இயன்முறை மருத்துவ சங்கத்தின் வாழ் நாள் சாதனையாளர் விருதையும் பெற்றவர் ஆவார்.
பி.எஸ்.ஜி, இயன்முறை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் ரா.மகேஷ் வரவேற்புரை ஆற்றினார். பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் விழாவிற்கு தலைமை தாங்கினார்.
விழாவில் மாணவர் களுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்பு விருந்தினர் டாக்டர் ஹம்ஸ்ராஜ் பட்டமளிப்பு உரையாற்றினார். தனது ஊக்கமளிக்கும் மற்றும் சிந்தனைத் தூண்டும் உரையில், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற சிறப்புமிக்க ஆளுமைகளுக்கு சிகிச்சை அளித்த அனுபவங்களை பற்றி தலைமை விருந்தினர் பகிர்ந்தார். பட்டம் பெறும் மாணவர்கள் தங்கள் தொழில்முறை திறனையும் தனிப்பட்ட நலனையும் பாதுகாப் பதற்காக ஐந்து அடிப்படை நெறிமுறைக ளைக் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அதாவது -சரியான உடல் நிலை மற்றும் உடற்கட்டமைப்பு, ஒத்திசைவைப் பேணுதல், போதுமான நீர்ப்போதம், சமநிலையான ஊட்டச் சத்து, தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்வது மற்றும் சீரான உறக்க முறையைப் பின்பற்றுதல் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், தங்கள் சிந்தனை முறைகளில் நம்பிக்கை வைத்து, தொழில்முறை வாழ்க்கைப் பயணத்தில் தீர்மானங்களைத் தைரிய மாக எடுக்க வேண்டும் என்றும் கூறி அவர் மாணவர்களை ஊக்கு வித்தார்.
இந்நிகழ்ச்சியில் 141 இளங்கலை மற்றும் 12 முதுகலை மாணவர்கள் தங்களது பட்டங்களைப் பெற்றனர். இவர்களில் 13 மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்களும், 17 மாணவர்களுக்கு வெள்ளிப் பதக்கங்களும் வழங்கப்பட்டன.
விழாவின் ஒருபகுதியாக, பயிற்சி காலத்தில் சிறந்த செயல்திறன், பாட வாரியான சிறப்பு மற்றும் மொத்த கல்விசார் சாதனை களுக்காக மாணவர்களுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப் பட்டன.
கல்விப்பாடங்கள், கல்விசார்ந்த செயல்கள் மற்றும் கூடுதல் செயல் பாடுகளில் சிறந்து விளங்கிய இளங்கலை மாணவர் களுக்கு சிறந்த மாணவர் விருது வழங்கப்பட்டது.

இந்த விருதை அனுவள்ளியம்மை, சுபாஷிணி, சாலிஹா, இந்து மதி ஆகியோர் பெற்றனர். முதுகலைப் பிரிவில், ஒட்டுமொத்த கல்விசார் சிறப்பிற்கான விருது ஐஸ்வர்யா ஷாமினிக்கு வழங்கப்பட்டது.
இவ்விருதுகள், பட்டம் பெற்ற மாணவர்கள் தங்களது எதிர்கால முயற்சிகளில் மேன்மையை நோக்கி தொடர்ந்து முனைப்புடன் செயல்பட ஊக்கமளிப்பதாக அமைந் தன.

கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியர் யா.அஷ்ரப் தொழில்முறை ஒழுக்க உறுதிமொழியை மாணவர்களுக்குஅளித்தார்.
இதனைத் தொடர்ந்து, சிறப்பு பட்டம்பெற்ற மாணவர்கள், பி.எஸ்.ஜி. நிறுவனங்களின் நிர்வாகம், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு, தங்களது கல்விபயணத்தின் முழுகாலத்திலும் வழங்கிய ஆதரவு, வழிகாட் டுதல் மற்றும் ஊக்கத்திற்கு நன்றியை தெரிவித்தனர்.

மேலும் வெள்ளிவிழா கொண்டாட்டங்களை முன்னிட்டு, பி.எஸ்.ஜி இயன்முறை மருத்துவக் கல்லூரி தனது மின்னி தழான றிஸிமிஞிணி-2025’ &ஐ வெளியிட்டது. அதன் தொடக்க வெளியீட்டை அறங்காவலர் வெளி யிட்டார்.
நிகழ்ச்சியின் இறுதி யில் பேராசிரியர் பா.சண்முக பிரியா நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img