fbpx
Homeபிற செய்திகள்நேர்மை, இரக்கம், சிறப்புடைமையின் தூதுவர்களாக மாணவர்கள் திகழ வேண்டும்

நேர்மை, இரக்கம், சிறப்புடைமையின் தூதுவர்களாக மாணவர்கள் திகழ வேண்டும்

கோவை பிஎஸ்ஜி கலை, அறிவியல் கல்லூரியின் 36-வது பட்டமளிப்பு விழா ஜிஆர்டி கலையரங்கில் நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவிற்கு பிஎஸ்ஜி&சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கல்லூரி முதல் வர் முனைவர் து.பிருந்தா வரவேற்புரை ஆற்றி ஆண்ட றிக்கை வாசித்தார்.

தலைமை விருந்தினராக மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் ஜெனரல் மற்றும் செயலாளர் முனைவர் என்.கலைச்செல்வி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேசுகையில் பிஎஸ்ஜிகலை, அறிவியல் கல்லூரி 1947ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தனது 77வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக் கிறது. பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் இளம் தலைமுறையினரை உருவாக்குவதன் மூலம் தேசத்தின் வளர்ச்சிக்குத் தனது பங்கினை ஆற்றி, பிஎஸ்ஜி நிறுவனம் தனது பாரம்பரியப் பெருமையைத் தக்க வைத்துக் கொண் டுள்ளது, என் றார். மேலும், சமூகத்தின் மாறி வரும் மனப்பாங்கினை எடுத்துரைத்தார்.

மேலும், பாரதப் பிரத மரின் சுதந்திரத் தின உரையின் சாராம்சத்தையும் (5 ஜி, வெளிப்படை தன்மை, தொழில்நுட்பம், குழுப்பணி, நேரமாற்றம்) மாணவர் களிடையே சிறப்பு விருந்தினர் முனைவர் என்.கலைச்செல்வி எடுத்துரைத்தார்.

எதிர் கால சமுதாய முன்னேற்றத் திற்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில் நுட்பக்கல்வி ஆகிய துறைகளைப் பற்றிய நுண்ணறிவை மாணவர் களுக்கு வழங்குவதன் மூலம் உலகளாவிய அடையாளத்தை பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்கள் உரு வாக்கியுள்ளன என்றும் அவர் பாராட்டினார்.

மாணவர்கள் தமது திறமைகளை உலக முன் னேற்றத்திற்காகப் பயன் படுத்துவதன் மூலம் சமூ கத்திற்கு நேர் மறையான பங்களிப்பை வழங்கும் பொறுப்புள்ள குடிமக்க ளாக இருக்க முடியும் என எடுத்துரைத்தார்.

இந்த கல்வி நிறுவனத்தில் கற்பிக்கப்பட்ட விழுமியங் களை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் நேர்மை, இரக்கம்மற்றும் சிறப்புடை மையின் தூதுவர்களாக மாணவர்கள் இருக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

பல்வேறு துறைகளிலும் 14 முனைவர் பட்டங்கள், 870 முதுகலைப் பட்டங்கள், 3121 இளநிலைப் பட்டங்கள் மற்றும் 68 முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்க ளுக்கும் சிறப்பு விருந்தினர் முனைவர் என்.கலைச்செல்வி பட்டங்கள் வழங்கினார். கல்லூரி சுயநிதிப் பிரிவின் துணை முதல்வர் முனை வர் அ.அங்குராஜ் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img