சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல்.திருமாவளவனின் பிரசாரத்துக்கு வலுசேர்க்கும் வகையிலும்,வாக்காளர்களைக் கவரும் விதத்திலும் புதுச்சேரியைச் சேர்ந்த அந்தக் கட்சியின் நிர்வாகி ஏகாம்பரத்தின் ஏற்பாட்டில் 100 கிலோ எடையில், 7 அடி உயரம், 6 அடி அகலத்தில் பிரம்மாண்ட மண் பானை செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி முருங்கப்பாக்கம் மண்பாண்ட கலைஞர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் பானை சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.