நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனை த்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் வேட்பாளர்களும், வேட்பாளர்களை ஆதரித்து கட்சியினர்கள், கட்சி தலைவர்கள், நட் சத்திர பேச்சாளர்கள் எனத் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவை அ.தி.மு.க வேட்பாளரான சிங்கை ராமசந்திரனை ஆதரித்து அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக புலியகுளம் பகுதியில் வாக்கு சேகரித்த கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன் சாலையோர இஸ்திரி கடையில் துணிகளுக்கு இஸ்திரி போட்டு அ.தி.மு.க வேட்பாளர் சிங்கை ராமசந்திரனுக்கு வாக்கு சேகரித்தார்.