தென்காசி ஏஎம்சி பள்ளி மாணவ மாணவிகளின் பேச்சுப்போட்டி ஓவிய போட்டியுடன் பொதிகை புத்தகத் திருவிழா தொடங்கியது . அதிக எண்ணிக்கையிலான பள்ளி மாணவ, மாணவிகள் புத்தக கண்காட்சியினை கண்டு களித்தனர். ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கி மகிழ்ந்தனர்.
மாலையில் நடந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) முத்துக்குமார் வரவேற்புரை ஆற்றினார். எழுத்தாளர்கள் பேராசிரி யர் நவீனா நூல்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார். அவர்கள் மொழிபெயர்ப்பு என்பது ஒரு பாதை எனும் தலைப்பில் தேவதாஸ், பொருள் அல்ல பொருள் தலைப்பில் திரைப்பட இயக்குநர் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். தமிழிசை அறிஞர் மம்மது குழுவினரின் தமிழ் இசை கலைநிகழ்ச்சி நடைபெற்றது. நூலகர் சண்முகவேல் நன்றி தெரிவித்தார்.
போட்டிகளை உடற்கல்வி இயக்குநர் நாராயணனும் விழா நிகழ்வுகளை நூலகர் முருகனும் ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.



