fbpx
Homeபிற செய்திகள்டபுள் டக்கர் பஸ்சில் பயணித்து மகிழ்ந்த ஆதரவற்ற குழந்தைகள்

டபுள் டக்கர் பஸ்சில் பயணித்து மகிழ்ந்த ஆதரவற்ற குழந்தைகள்

கோவை விழாவை முன்னிட்டு இலவச டபுள் டக்கர் பேருந்து பயணம் துவங்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். வரும் 8ம் தேதி வரை இந்தப் பேருந்தில் முன்பதிவு செய்து இலவசமாக பயணம் மேற் கொள்ளலாம்.

இந்த பேருந்துக்கு கோவை மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்பேருந்தில் கோவை மாநகருக்குள் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யலாம். தினமும் ஏறத்தாழ 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த பேருந்தில் பயணம் செய்வதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று ஆதரவற்ற 20 குழந்தைகளை கோவை விழா நிர்வாகிகள் டபுள் டக்கர் பேருந்தில் அழைத்துச் சென்றனர். இவர்கள் வ.உ.சி மைதானத்தில் இருந்து காந்திபுரம் வரை பயணம் செய்தனர். முதல் முறையாக டபுள் டக்கர் பேருந்தில் பயணம் குழந்தைகள் மிகுந்த உற்சாகமடைந்தனர். இவர் களுக்கு கோவை விழா நிர்வாகிகள் சாக்லேட் கொடுத்து மகிழ்வித்தனர். மேலும் பேருந்தில் பயணம் செய்தகுழந்தைகள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img