fbpx
Homeபிற செய்திகள்கோவை இரத்தினம் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

கோவை இரத்தினம் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

கோவை இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா, மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. “ஐந்திணை” எனப் பெயரிடப்பட்ட இந்த விழா, தமிழ்நாட்டின் ஐந்து நிலப்பரப்புகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை ஆகியவற்றை மையமாகக் கொண்டு தனித்துவமான கருப்பொருளுடன் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் மாணவர் களும் ஆசிரியர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கொண்டாட்டங்கள் பாரம்பரிய நடை முறையுடன் தொடங்கி, தமிழ் பழக்க வழக்கங்களையும் கிராமப்புற வாழ்க்கையையும் பிரதிபலிக்கும் ஒரு வண்ணமயமான ஊர் வலத்துடன் தொடர்ந்தன. வள்ளி கும்மி, மயிலாட்டம் மற்றும் பொய்க்கால் குதிரையாட்டம் போன்ற பாரம்பரிய நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்வதாக இருந்தது. மேலும் கோலப் போட்டி, உறியடி, கயிறு இழுத்தல் மற்றும் முளைப்பாரி உள்ளிட்ட பல்வேறு பாரம்பரியப் போட்டிகளும் விளையாட்டுகளும் நடத்தப்பட்டு, வளாகம் முழுவதும் திருவிழாக் கோலத்தை உருவாக்கியது.

மாணவர் பேரவைத் தலைவர் ரெத்தினராஜன், துணைத் தலைவர் வித்யா பாரதி, செனட் தலைவர் அபிஷேக் ஆகியோரின் வழிகாட்டுதலுடன், மாணவர் பேரவை அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட தன்னார் வலர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img