பெரியநாயக்கன்எ பாளையத்தில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்ப டும் ஜோதிபுரத்தில் மத் திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் ஞாயிற் றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் பெரியநாயக்கன்பாளையத்தில் வித்யாலய மேட்டிலிருந்து ஜோதிபுரம் வரை ரூ.115 கோடி மதிப்பீட்டில் சுமார் 1.90 கிமீ தூரம் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. பணி கள் நிறைவடைந்து தற்போது இதில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகின்றது.
திறப்பு விழா ஏற் பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் ஜோதிபுரத்தில் மேம்பால சாலையும், அணுகு சாலையும் இணை யும் இடத்தில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பிருப்பது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தையடுத்து திறப்பு விழா தள்ளி வைக்கப்பட்டது. இதுகுறித்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தேசிய நெடுஞ்சாலை அதி காரிகளுக்கு உத்தரவிட் டார். அதன்பேரில் அதிகாரிகளும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் பெ.நா.பாளையம் பாஜக நிர்வாகிகள் இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மேம்பா லத்தினை ஆய்வு செய்தார். அணுகுசாலையை விரிவுபடுத்தவேண்டிய அத்யாவசியம் இருப்பதால் அதிகாரிகளுடன் பேசி இதற்கு உரிய தீர்வு விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
பின்னர் குப்பிச்சிபாளயம் சாலையில் நடந்த நகர பாஜக அலுவலகத் திறப்பு விழா மற்றும் கொடியேற்றுவிழாவில் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது பாஜகவின் கோவை வடக்கு, கோவை மாநகர் மாவட்டங்களின் தலைவர்கள் சங்கீதா, ரமேஷ்குமார், முன்னாள் மாவட்டத் தலைவர் நந்தகுமார், வடக்கு மாவட்டப்பொதுச் செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், பெரியநாயக்கன்பாளையம் மண்டலத் தலைவர் மகேந்திர ராஜ், நகரப் பொறுப்பாளர் வீராசாமி உள்பட கட்சி நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.



