fbpx
Homeபிற செய்திகள்நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் வளர்ச்சிப் பணிக்கு பூமிபூஜை

நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் வளர்ச்சிப் பணிக்கு பூமிபூஜை

பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சிப் பணிகளுக்கான பூமிபூஜை நடந்தது.

ஊராட்சி ஒன்றிய பொதுநிதியின் கீழ் இந்த ஊராட்சிக்குள்பட்ட மடத்தூர் கிராமத்தில் உள்ள ஆதிதி ராவிடர் காலனியில் ரூ.3.35 லட்சம் மதிப்பீட்டிலும், சோமையனூரில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் ரூ.6.20 லட்சம் மதிப்பீட்டிலும், அம்மன் நகர் திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் ரூ.9.15 லட்சம் மதிப்பீட்டிலும் புதிய காங்கிரீட் சாலைகள் அமைக்கப்பட உள்ளன.

இவற்றிற்கென நடந்த பூமி பூஜைகளுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் கார்த்திகேஸ்வரி சுந்தர ராஜன் தலைமை வகித்தார். ஒன் றியக்குழுவின் பெருந்தலைவர் நர்மதா துரைசாமி முன்னிலை வகித்தார். கவுண்டம்பாளையம் சட்டமன்ற உருப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பணிகளைத் தொடக்கி வைத்தார். இதில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வி.கே.வி.சுந்தரராஜன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சோமசுந்தரம், குமாரசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img