fbpx
Homeபிற செய்திகள்எம்.எஸ்.தோனி கையெழுத்துடன் வெளியாகும் பிளாட்டினம் கில்ட் இன்டர்நேஷனல் நகைகள்

எம்.எஸ்.தோனி கையெழுத்துடன் வெளியாகும் பிளாட்டினம் கில்ட் இன்டர்நேஷனல் நகைகள்

மென் ஆஃப் பிளாட்டினம் பிராண்டாண பிளாட்டினம் கில்ட் இன்டர்நேஷனல் (பிஜிஐ) இந்தியாவின் பண்டிகைக் காலத்தில் எம்.எஸ். தோனி சிக்னேச்சர் பதிப்போடு வருகிறது. இது ஒரு நவீன ஆளுமையின் நீடித்த பாரம்பரியத்தைப் பேசும் நகைகளின் வரிசை ஆகும்.

விலைமதிப்பற்ற நகைகளில் தூய்மையின் மிக உயர்ந்த தரங்களில் ஒன்றான 95% தூய பிளாட்டினத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த நகைகள் இயற்கையாகவே வெண்மையானவை, ஒரு போதும் மங்காதவை, கறுத்துப்போகாதவை. ஒவ்வொரு நகையும் நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பிளாட்டினம் இணைப்புகள் ஒரு வலுவான பிரேஸ்லெட்டை உருவாக்குகின்றன. இது வளைந்து கொடுக்காத மீள்தன்மையின் சக்தியை பிரதிபலிக்கிறது. 95% தூய பிளாட்டினத்தில் வடிவமைக்கப்பட்ட இது, காலப்போக்கில் மங்காமல் இருக்கும். இது நம்பமுடியாத அளவிற்கு அரிதானதும்கூட. எம்.எஸ்.தோனியின் கையெழுத்தைக் கொண்ட திடமான பிடிப்பை இந்த பிரேஸ்லெட் கொண்டுள்ளது. மதிப்புகளைப் போற்றும் ஆண்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த நகை, எப்போதும் தங்களுக்குள் இருக்கும் வலிமையைக் காண தூண்டுகிறது.

படிக்க வேண்டும்

spot_img