fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகள் நடவு

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகள் நடவு

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், மெட்ராஸ் ரெஜிமென்ட் பிராந்திய ராணுவ 110 காலாட்படை பட்டாலியனுடன், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இணைந்து, மரக்கன்றுகள் நடும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார். 110 பட்டாலியன் 2-வது கமாண்டர் லெப்டினன்ட் கர்னல் விக்ரம் சிங் யாதவ், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நட்டனர்.

இவ்விழாவில் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் சிவக்குமார், கௌரவ லெப்டினன்ட் முருகன், 110 காலாட்படை பட்டாலியன் பிரிவின் பிற அதிகாரிகள், உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் பிரகதீஸ்வரன், முனைவர் ஆர்.நாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img