fbpx
Homeபிற செய்திகள்உலக உயர் ரத்த அழுத்த அமைப்பு சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

உலக உயர் ரத்த அழுத்த அமைப்பு சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

உலக உயர் ரத்த அழுத்த அமைப்பு சார்பில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இலவச உயர் ரத்த அழுத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் பல்வேறு மருத்துவமனைகளை சேர்ந்த 250 மருத்துவர்கள் கலந்து கொண்டு ஏராளமான பொதுமக்களுக்கு பரிசோதனை செய்தனர்.

உயர் ரத்த அழுத்தம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முக்கிய காரணியாக உள்ளது. உலகளவில் இறப்பு மற்றும் இயலாமைக்கான முன்னணி ஆபத்து காரணிகளில் முக்கிய ஒன்றாக இது உள்ளது.

உலக உயர் ரத்த அழுத்த அமைப்பில் 80 தேசிய உயர் ரத்த அழுத்த சங்கங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்த சங்கங்கள் இந்த அமைப்பின் கவுன்சில் உறுப்பினர்களாக இருப்பதோடு, இந்த அமைப்பின் நிர்வாகி, வாரியம், கவுன்சில் மற்றும் குழுக்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இது பல்வேறு நாடுகளில் பிராந்திய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. இது தொடர்ந்து உயர் ரத்த அழுத்தத்தை தடுக்கும் நோக்கில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img