தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் ஓவ்வொரு புதன்கிழமையில் மண்டல அலுவலகத்தில் அப்பகுதிக்குட்பட்ட பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் கூட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட ஜெஎஸ்நகாில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார்.
இணை ஆணையர் ராஜாராம் துணை மேயர் ஜெனிட்டா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, வரவேற்புரையாற்றினார். மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது: தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க ஊராட்சி உள்ளிட்ட புறநகர் பகுதியில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் படி குறை கேட்பு முகாம் நடத்தப்படுகிறது.
குறிப்பாக சொத்துவரி, குடிதண்ணீர் வகையில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகள் உள்ள மனுக்களுக்கு உடனடியாக இங்கு தீர்வு காணப்படுகிறது. இதுவரை மாநகராட்சி பகுதியில் 2500 புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு பகுதியில் புதிய கால்வாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதிலும் சாலையை பொறுத்தவரை கல்லூரி, பள்ளி, மருத்துவமனை, கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அந்த பணி நடைபெறுகிறது.
முத்தையாபுரம் உப்பாற்று ஓடைமுதல் முள்ளக்காடு வரை பொதுமக்கள் நல்ன கருதி புதிதாக மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் ஹைமாக்ஸ் லைட்கள் கோவை சென்னையை போல் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் பாதுகாப்பையும் கருதி மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் குற்றச்செயல்கள் தடுக்கப்பட்டு பொதுமக்கள் நலன் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் மறுவாழ்வு மையம் என்று விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.
இங்கு ெகாடுக்கப்படுகின்ற அனைத்து மனுக்களுக்கும் 30 நாட்களில் தீர்வு காணப்பட்டு அதற்கான தகவல்களை மனுதாரர்களுக்கு தொிவிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். இந்த முகாமில் 126 மனுக்கள் பெற்றுக்கொண்டதில் பெயர் மாற்றம் கோரிய 4 பேருக்கு மேயர் ஜெகன்பெரியசாமி உடனடியாக ஆணை வழங்கினார்.
நிகழ்ச்சியில் உதவி ஆணையர் கல்யாணசுந்தரம், நகரமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், கண்காணிப்பு அலுவலர் குருவையா, சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, கவுன்சிலர்கள் வைதேகி, சரவணக்குமார், விஜயகுமார், ராஜதுரை, பட்சிராஜ், சுயம்பு, ராஜேந்திரன், முத்துவேல், அதிமுக கவுன்சிலர் வெற்றிச்செல்வன், ஊராட்சி ஓன்றிய குழு துணைத்தலைவர் ஆஸ்கர், வடக்கு மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் விஜயகுமார், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், நடேசன் டேனியல், பிரசாந்த், முத்துராஜா, வசந்தி பால்பாண்டி, மாநகர நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், தொண்டரணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன், இலக்கிய அணி துணை தலைவர் நலம்ராஜேந்திரன், ஸ்பிக்நகர் பகுதி மகளிர் அணி செயலாளர் மாலாசின்கா, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பர், உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் சமூகஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.