இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப்படத்தைத் திறந்து வைத்து, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் “சுயமரியாதை இயக்கம் மற்றும் அதன் மரபுகள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வினை, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் நேரலையில் கண்டுகளிக்கும் வகையில், நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் மாநகர் மாவட்ட திமுக சார்பில், கட்சி அலுவலகத்தில் பெரிய அளவிலான எல்.இ.டி.திரை அமைத்து, ஒளிபரப்பப்பட்டது.
மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோவை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாநகர் மாவட்ட திமுக பொருளாளர் எஸ்.எம்.பி.முருகன், திமுக மாணவர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் பி.ஆர்.அருள்மொழி, தீர்மானக்குழு உறுப்பினர் மு.இரா.செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ. தமிழ்மறை, தொழிலாளர் அணி துணைச் செயலாளர் தொமுச தமிழ்ச்செல்வன், மாணவர் அணி துணைச் செயலாளர் வி.ஜி.கோகுல், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார், திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் மு.மா.ச.முருகன், சரஸ்வதி புஷ்பராஜ், ச.குப்புசாமி, தலைமைக்கழகப் பேச்சாளர் கோவை சம்பத், பகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் ப.பசுபதி, வ.ம.சண்முகசுந்தரம், டெம்போ சிவா, மா.நாகராஜ், என்.ஜே.முருகேசன், ஆ.கண்ணன், சிங்கை மு.சிவா, இரா.சேரலாதன், ஏ.எஸ்.நடராஜ், சிங்கை அன்பு, பாபு(எ)பாலகிருஷ்ணன், குட்டி ஜெயச்சந்திரன், கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத் தலைவர் தெய்வயானை, மாநகராட்சி பணிகள் குழுத் தலைவர் சாந்தி முருகன், அணிகளின் அமைப்பாளர்கள் இளைஞரணி இரா. தனபால், மாணவர் அணி சிவப்பிரகாஷ், தகவல்தொழில்நுட்ப அணி ஆர்.கே.சுரேஷ் குமார், பொறியாளர் அணி நா.பாபு, மகளிர் அணி தலைவர் சி.வி.தீபா, மகளிர் அணி அன்னம்மாள் (முன்னாள் கவுன்சிலர்) நெசவாளர் அணி வி.மணி, வர்த்தக அணி தலைவர் தென்னவன் சுப்பிரமணியம், கோனியம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் வி.லட்சுமணன், வழக்கறிஞர் குமணன், வழக்கறிஞர் வினோத் குமார், சாரமேடு இஸ்மாயில், லாரா பிரேம்தேவ், துரை.பிரவீண், டவுன் பா. ஆனந்த், வழக்கறிஞர் ப.ப.சிவகுமார், ந. சண்முகசுந்தரம், கேபிள் நித்யானந்தம், கராத்தே வீரமணி, ஆறுமுகம், புகழேந்தி, குமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் பிரவீன்ராஜ், கீதா சேரலாதன், , அம்பிகா தனபால், இலட்சுமி மற்றும் நவீன் முருகன், சீனிவாசன், ஜெயப்பிரதா தேவி, பிரின்ஸ், வசந்தி உள்பட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.



