fbpx
Homeபிற செய்திகள்வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அறிவுரை

வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அறிவுரை

தேனியில் நேற்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் தேனி அல்லிநகரம் நகராட்சி முன்பு மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிப்பதின் அவசியத்தை மாவட்ட ஆட்சியர் எடுத்து வைத்தார் மேலும் இந்த ஆண்டு 100% வாக்களிப்பதை உறுதி செய்யும் நோக்கில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாற்றுத் திறனாளிகள் தங்களது வாகனத்துடன் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஷஜீவனா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேலும் இந்த நிகழ்வில் தேனி அல்லிநகர் நகராட்சி ஆணையாளர் ஜாஹங்கிர்பாட்ஷா மகளிர் திட்ட அலுவலர் ரூபன் சங்கர் ராஜா, மகளிர் திட்ட உதவி அலுவலர் டென்னிஸ் மற்றும் மாற்றுத்திறனாளி மாவட்ட அலுவலர் காமாட்சி பிசியோதெரபி டாக்டர் கார்த்திகேயன் மற்றும் கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் சுகாதார அலுவலர் கவிப்பிரியா செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி நல்லதம்பி ஆகியோர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img