fbpx
Homeபிற செய்திகள்தேர்தலில் வாக்களிப்பது எப்படி?ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சி

தேர்தலில் வாக்களிப்பது எப்படி?ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சி

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல்19-ம் தேதி நடைபெறஉள்ளது. இதையொட்டி தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கவுள்ள மாணவர்களுக்கு, ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாதிரிவாக்குச்சாவடி அமைத்து பயிற்சி செயல் விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நேற்று (4ம் தேதி) நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். கோவை தெற்கு வட்டாட்சியர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பி.சரவணக்குமார், கோவை ஸ்வீப் உதவித்திட்ட அலுவலர்கள் மா.சாந்தசீலன், கே.அசோகன், துணைவட்டாட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர் ஆர்.செல்வம் ஆகியோர் பங்கேற்று, நாடாளுமன்றத் தேர்தல் நடைமுறைகள் மற்றும்மின்னணு இயந்திரத்தில் வாக்களிப்பது எப்படி? என்று பயிற்சி அளித்தனர்.

அப்போது மாணவர்கள் தேர்தல் வாக்களிப்பது போலவே வரிசையில் நின்று ஆவணங்களைக் காண்பித்து மின்னணு இயந்திரத்தில் மாதிரிவாக்குச் செலுத்தினர். பின்னர் “தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்குச் செலுத்தி ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும். 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்யவேண்டும்” என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பயிற்சி முதல் முறைவாக்களிக்கும் இளம் வாக்காளர்களான மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

இதற்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் எஸ்.பிரகதீஸ்வரன், அ.சுபாஷினி, முனைவர்ஆர்.நாகராஜன், முனைவர் ஆ.சஹானா ஃபாத்திமா, யு.பிரவீன் ஆகியோர் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img