தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி வீடு வீடாக சென்று துண்டு பிரதிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி அனைத்து மக்களையும் தேர்தல் விழிப்புணர்வு சென்றடையும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று (4ம் தேதி) தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் வீடு வீடாக சென்று தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரதிகள் வழங்குதல், வீடுகளில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டுதல், சிறுகுறு வர்த்தக நிறுவனங்களுக்கு சென்று வாடிக்கையாளர்களை நேரில் சந்தித்து 100மூ வாக்களிக்க அறிவுறுத்துதல், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களை கொண்டு தேர்தல் விழிப்புணர்வு நடத்துதல், வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் வழங்கும் பில்களில் தேர்தல் விழிப்புணர்வு இடம்பெறச் செய்தல், தெருக்களில் தேர்தல் விழிப்புணர்வு கோலங்கள் வரைதல், நகராட்சிகளில் வழங்கப்படும் ரசீதுகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெறச் செய்தல் போன்ற பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இப்பேரணிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்க அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், தமிழ்நாடு நகர்புறவாழ்வாதார இயக்கம் சமுதாய அமைப்பாளர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.