சிதம்பரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மற்றும் சஞ்சல் ராஜ் ராஜேந்திரகுமார் கோத்தாரி குடும்பத்தினர் சார்பில சிதம்பரம் விழல் கட்டி பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீமஹாவிர் ஜெயின் பவன்லாலில் நடை பெற்றது முகாமிற்கு ஸ்ரீ மகாவீர் ஜெயின் அசோசியேஷன் தலைவர் விஷால் ஜெயின் தலைமை வகித்தார். செயலாளர் கபில்சந்த் ஜெயின் வரவேற்றார்.
ராஜேந்திரகுமார் கோத்தாரி, அரிஹந்த் குமார், கோத்தாரி ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.
முகாமிற்கு சிறப்பு விருந்தினராக சிதம்பரம் சார் ஆட்சியர் ரஹ்மி ராணி, புவனகிரி ரத்தின சுப்பிரமணியன் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்
இதில் கலந்து கொண்ட 213 பயனாளிகளுக்கு கண் சிகிச்சை அளிக்கப்பட்டு இலவசமாக கண் கண்ணாடி, இலவசமாக மருந்து மாத்திரைகள் மதன்லால்ஜி ஜெயின் வழங்கினார். 72 பயனாளிகள் அறுவை சிகிச்சைக்காக பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் மஹாவீர் ஜெயின், கமல்ஜெயின், பிரகாஷ் ஜெயின், அசோக் ஜெயின், ஹீராசந்த் ஜெயின், லலித் ஜெயின், சந்திப்ஜெயின், ஆஷஷ் ஜெயின், விஜய் தலடிலா, சுனில், ஷாசில் சலானி, நவீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டது முடிவில் பொருளாளர் அரிஹந்த் ஜெயின் நன்றி கூறினார்.