முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ரால்ப் முல்லர் பென்னிகுவிக் பிறந்த நாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பகுதியில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உரையாற்றினார்-. இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் என்.ராமகிருஷ்ணன், ஆ.மகாராஜன், கே.எஸ்.சரவணக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.