fbpx
Homeபிற செய்திகள்சென்னையில் பாத நோய் புண் கிளினிக் பயிற்சித் திட்டம் துவக்கம்

சென்னையில் பாத நோய் புண் கிளினிக் பயிற்சித் திட்டம் துவக்கம்

எம்வி நீரிழிவு மருத்துவமனை மற்றும் ராயபுரம் பேராசிரியர் எம் விஸ்வநாதன் நீரிழிவு ஆராய்ச்சி மையம் ஆகியவை  சென்னையில் 38வது பேராசிரியர் எம்.விஸ்வநாதன் டிஆர்சி தங்கப்பதக்க பேருரையை ஏற்பாடு செய்திருந்தனர்.  

இந்நிகழ்வில் நீரிழிவு பாத நோய்த்தொற்றினால் ஏற்படும் பிரச்சினைகளைத் தடுப்பதற்கும், சுகாதார சேவைகளை வழங்குபவர்களுக்கு கற்பிப்பதற்கும் மருத்துவமனையால் “புண் கிளினிக் பயிற்சித் திட்டம்“ தொடங்கப்பட்டது. இதில் தலைமை விருந்தினராக  கேரள உயர்நீதிமன்ற நீதிபதி கோபிநாத் மேனன் கலந்து கொண்டு “மருத்துவர்களிடம் இருந்து இந்த சமூகம் என்ன எதிர்பார்க்கிறது” என்று பேசினார்.

இதில் 38வது பேராசிரியர் எம் விஸ்வநாதன் தங்கப்பதக்க பேருரை வழங்கினர். தொடர்ந்து

 டாக்டர் டேவிட் ஆம்ஸ்ட்ராங் பேசினார். இதில் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் மற்றும் நீரிழிவு பாத விருது 2024 ஆகியவை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், எம்.வி. நீரிழிவு மருத்துவமனையின் தலைவர் டாக்டர் விஜய் விஸ்வநாதன் கூறுகையில்,

“புண் கிளினிக் சேவைகளால்  பத்தாண்டுகளில் 88.6% கால்கள் காப்பாற்றப்பட்டுள்ளன” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img