கோவை மாவட்ட பான்புரோக்கர்ஸ் அண்ட் மணிலெண்டர்ஸ் அசோசியேசனின் வருடாந்திர பேரவை கூட்டம் 14.9.25 ஞாயிற்றுக்கிழமை காலை தடாகம் ரோடு இடையர்பாளையத்தில் சங்க கட்டிடமான தங்க மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
சங்கத்தின் துணைத் தலைவர் ஏ.ஆர்.நாராயணன் தலைமை தாங்கி கூட்டத்தை துவக்கி வைத்தார்கள் செயலாளர் ஏ.பாண்டியன் ஆண்டறிக்கை மற்றும் சங்கத்தின் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தார்.
துணைத் தலைவர் எஸ்.பெருமாள் மற்றும் துணைச் செயலாளர்கள் எம்.சி. லோகநாதன், எஸ்.அழகு ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் தராசு முத்திரையிடும் காலத்தை ஓராண்டிலிருந்து இரண்டு ஆண்டாக உயர்த்துமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



