ஈரோடு மாவட்ட வ.உ.சி பூங்கா மைதானத்தில் இயற்கை வேளாண் சந்தையினை மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா திறந்து வைத்து இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட விவசாய பொருட்களை பார்வையிட்டார்.
பாரம்பரிய விவசாயிகளை ஊக்குவிக்கவும் அதனை விற்பனை செய்வதற்கும் அங்கக வேளாண் சந்தை திறக்கப்பட்டு வருகிறது. இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த வேளாண் விளைபொருட்களை பார்வையிட்டார். இந்த சந்தையானது வாரம் ஒரு நாள் நடைபெறும்.
மக்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கூடுதல் நாட்கள் விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கப்படும். தற்போது மக்களிடையே ரசாயன கலப்பின்றி இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் வாங்குவது குறித்த விழிப்புணர்வு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த இயற்கை வேளாண் சந்தை மக்களுடைய நல்ல வரவேற்பு பெரும் என தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.