ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் மனிதநேய வார விழாவை முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு அரசு துறைகளின் அரங்குகளை அமைச்சர் பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அம்ரித் மற்றும் அரசு அலுவலர்கள், சுற்றுலா பயணிகள் இருந்தனர்.