கடலூர் மாவட்டம் -நெய்வேலி என்.எல்.சி., விஜி லன்ஸ் துறை முதன்மை அதிகாரியாக இந்திய அஞ்சல் சேவையின் அதிகாரியான, அப்பாக் கண்ணு கோவிந்தராஜன் நேற்று பொறுப் பேற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான இவர், தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள அஞ்சல் துறையில் பணியாற்றினார்.
அதற்கு முன்பு டி.சி.ஐ.,லிமிடெட், கனரா வங்கி மற்றும் இந்தி யன் ரிசர்வ் வங்கி போன்ற பல்வேறு நிறுவனங்களில் பணி யாற்றியுள்ளார் இந்திய அஞ்சல் துறையில் தனது 20 ஆண்டுகால சேவையில்,முதுநிலை அஞ்சல் துறை கண்காணிப்பாளர், உதவி இயக்குனர் ஜெனரல், அஞ்சல் சேவைகள் இயக்குனராக பணியாற்றுவதுடன் மகாராஷ் டிரா, புதுடெல்லி, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் போன்ற பதவிகளை வகித்தார்.
2014 மற்றும் 2015 ஆண்டுகளில் இந்திய அஞ்சல்களில் காப்பீடு தீர்வுக்கான மைய வங்கியை தொடங்குவதில் முக்கிய பங்கேற்றியவர் அஞ்சல் துறை சேவைகள் தவிர்த்து, போக்குவரத்து தளவாடங்கள்,வணிகம் மற்றும் மத்திய வங்கி போன்ற பல்வேறு துறைகளில் இலக்குகளை மிஞ்சி பணியாற்றி சாதனை படைத்துள்ளார்.