ஈரோடு மாநகராட்சி யின் புதிய ஆணையராக டாக்டர் நர்னாவேர் மணீஷ் சங்கர்ராவ் வெள்ளிக்கிழமை பொறுப் பேற்றார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஈரோடு மாவட்ட டிஆர்டிஏ திட்ட அலுவலராக பணியாற்றினார்.
செய்தியாளர்களி டம் பேசிய அவர், காவிரி ஆற்றில் மாநகராட்சி சாக்கடை நீர் கலப்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.
காளை மீட்டு சந்திப்பில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்திற்கு சென்று அங்குள்ள கடைகளை விரைந்து வாடகைக்கு விடப்படும் என்றார்.
ஈரோடு மாநகராட்சி புதிய ஆணையாளராக பொறுப்பேற்ற நர்னாவேர் மணீஷ் சங்கர்ராவ் அவர்களை ஈரோடு மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு கௌரவத் தலைவர் விஜயகுமார், கூட்டமைப்புத் தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் சோமசுந்தரம் அவ ரது அலுவலகத்தில் வரவேற்ற னர்.