சக்தி லாக்கர்ஸ் புதிய கிளையை சென்னை பெசன்ட் நகரில் 2வது அவென்யுவில் பிப்ரவரி 3 அன்று துவக்கியது.
இதன் துவக்க விழாவில், வசதிகளை தொடர்ந்து மேம்படுத்துதல், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற சேவை யை வழங்குவது குறித்து விளக்கம் தரப்பட்டது.
இதில் எஸ்.எப்.எஸ்.எல்., நிறுவனத்தின் செயல் இயக்குனர் ஸ்ருதி பாலசுப்ரமணியம் புதிய பெட்டக வசதியை துவக்கி வைத்து பேசுகையில், “தங்கம், ஆபரணங்கள் இந்திய சந்தையில் முக்கியத்துவம் பெற்றவை.
வாடிக்கையாளர்கள், தங்களது நகைகளை பாதுகாப்பாக, பாதுகாப்பு பெட்டகங்களில் வைப்பதோடு, அவற்றை நீண்ட நேரம் பயன்படுத்தவும், திங்கள் முதல் சனிக்கிழமைகள் வரை எளிதாக கையாளும் வசதியையும் விரும்புகின்றனர்” என்றார்.
நிறுவனத்தின் முழுநேர இயக்குனர் நினன் வர்கீஸ் பேசுகையில், “பெசன்ட் நகர் கிளையானது, மாபெரும் வசதிகளை கொண்டுள்ளது. உயர்வான இடத்தில் உள்ளது.
சமீப காலங்களில் சென்னை நகரில் ஏற்படும் வெள்ளத்திலும் பாதுகாப்பு கொண்டதாக உள்ளது. கிளையின் பாதுகாப்பை உறுதிப்படுத் தும் வகையில் அதி நவீன பாதுகாப்பு அமைப்பு களையும் கொண்டுள்ளது.
இத்தகைய லாக்கர் சேவையுடன் எஸ்.எப்.எஸ்.எல்., பரஸ்பர நிதி, நிறுவன வைப்பு நிதி போன்ற சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறது,” என்றார். துவக்க விழாவில் பல்வேறு முக்கிய விருந்தினர்கள், மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.