அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் பொறியியல் பள்ளி, கோயம்புத்தூர் கார்ப்பரேட் மற்றும் தொழில் தொடர்புகள், இயந்திர பொறியியல் துறை, ஆட்டோமொட்டிவ் டெஸ்ட் சிஸ்டம்ஸ் மற்றும் SAEINDIA கல்லூரி இணைந்து, நிலைத்துணைவான போக்குவரத்து குறித்த இரு நாள் பணிக்கூடத்தை நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக, நவீன தொழில் நுட்பம் கொண்ட இ-மொபிலிட்டி சோதனை மையம் திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் டாக்டர் சசாங்கன் ராமநாதன் பொறியியல் கல்லூரியின் டீன் மற்றும் அம்ருதா விஸ்வ வித்யா பீடத்தின் முதன்மை இயக்குநர்
பரமேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில், ஏடிஎஸ் -யின் நிர்வாக இயக்குனர் இராமநாதன் ஸ்ரீனி வாசன் கூறுகையில், நாங்கள் 2015ஆம் ஆண்டு ஏஏஆர்டிசி-யை பவர்டிரெயின் சோதனை குறித்த ஆராய்ச்சிக்கு மையமாக வைத்து தொடங்கினோம்.
இன்றோ, இவி ஆய்வகம், ஏடிஏஎஸ் சிமுலேஷன் ஆய்வகம் மற்றும் பேட்டரி சோதனை மையத்தை தொடங்கியுள்ளோம். இந்த இரு நாள் பணிக்கூடம் நிலைத்துணைவான போக்குவரத்து தொடர்பான முக்கிய முன்னேற்றங்களை ஆராய்ந்தது” என்றார்.
இந்த அமர்வுகளில் ஹைட்ரஜன் எஞ்சின்கள் போன்ற முன்னணி தலைப்புகள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.