fbpx
Homeபிற செய்திகள்நேரு கலைக் கல்லூரி வளாகத்தில் புதிய சினிமா தியேட்டர் துவக்கம்

நேரு கலைக் கல்லூரி வளாகத்தில் புதிய சினிமா தியேட்டர் துவக்கம்

இந்திய கல்லூரிகளில் முதன் முறையாக கோவை நேரு கல்வி குழுமம் சார்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய “நேரு சினிமா” தியேட்டரை. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் துவக்கிவைத்தார்

தமிழகம் மற்றும் கேரளாவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான நேரு கல்வி குழுமம் கடந்த 54 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி சேவையாற்றி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருமலையாம்பாளையத்தில் அமைந்துள்ள நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் ஊடகவியல் துறையின் சார்பில் புதியதாக நேரு சினிமா என்ற பெயரில் அதிநவீன தியேட்டர் துவக்கப்பட்டுள்ளது.

நேரு சினிமா லோகோ

இதை மத்திய தகவல் ஒலிபரப்பு துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் குத்துவிளக்கு ஏற்றி நேரு சினிமா லோகோவை வெளியிட்டு சினிமா அரங்கை துவக்கிவைத்தார்.

பிரபல திரைப்பட நடிகரும் சில்வர் ஜுப்ளி ஹீரோவுமான நடிகர் மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கௌரவ விருந்தினராக பிரபல திரைப்பட இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி கலந்து கொண்டார்.

நேரு கல்வி குழுமங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் அட்வகேட் டாக்டர் பி. கிருஷ்ணதாஸ் முன்னிலை வகித்தார். தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான டாக்டர் பி.கிருஷ்ணகுமார் வாழ்த்துரை வழங்கினார்.

நேரு கல்வி குழுமத்தில் விடுதியில் தங்கி பயிலும் மாணவ மாணவிகளுக்கு வாரம் ஒரு முறை திரைப்படம் வெளியிடப்படும்.இங்கு கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் குறும்படம் தயாரிப்போரின் குறும்படங்கள் இங்கு திரையிடப்படும்.
நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர். பி. அனிருதன் வரவேற்றார்.

மக்கள் தொடர்பு இயக்குனர் முனைவர் அ. முரளிதரன் நன்றி கூறினார்.
நேரு சர்வதேச பள்ளி தாளாளர் சைதன்யா கிருஷ்ணகுமார், நேரு கல்வி குழுமங்களின் முதல்வர்கள் டாக்டர் பி. மணியரசன், டாக்டர் சிவராஜா, மோசஸ் டேனியல், டாக்டர். ரவிகுமார், டாக்டர் பாலாஜி, நேரு கல்வி குழுமங்களின் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img