fbpx
Homeபிற செய்திகள்சிகரெட் விற்பதற்கு தடை விதிக்கப்படுமா?

சிகரெட் விற்பதற்கு தடை விதிக்கப்படுமா?

புகைப்பழக்கத்தை படிபடியாக ஒழிப்பதற்காக சட்டம் இந்தியாவுக்குத் தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நியுசிலாந்து நாட்டில் 2009-ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள், அதாவது 14 வயதுக்குட்பட்டவர்கள் புகைப்பிடிக்கவும், அவர்களுக்கு சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்கவும் தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

உலகில் இத்தகைய சட்டத்தை இயற்றிய முதல் நாடு நியூசிலாந்து தான். புகைப்பிடிப்போர் எண்ணிக்கை குறைவதால், நியுசிலாந்து மக்களின் மருத்துவத்திற்காக செலவிடப்படும் தொகை ஆண்டுக்கு ரூ.40ஆயிரம் கோடி (5 பில்லியன் டாலர்) குறையும்.

ஒரு சட்டத்தால் இவற்றை விட பெரிய நன்மையை ஒரு நாட்டுக்கு செய்து விட முடியாது. அதனால் தான் இது வரலாற்று சிறப்புமிக்க சட்டமாக பார்க்கப்படுகிறது.
புகைப்பழக்கத்தை படிப்படியாக ஒழிப்பதற்கான சட்டம் நியுசிலாந்தை விட இந்தியாவுக்கு தான் அதிகம் தேவை.

எனவே, இந்தியாவில் புகைப் பிடிப்பதற்கான வயதை 21 ஆக உயர்த்த வேண்டும். 2001-ம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்க தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும்.

இது குறித்து மாநில அரசுகளுடன் இந்திய அரசு கலந்தாலோசித்து தொலைநோக்குப் பார்வையுடன் ஒரு சட்டத்தை இயற்ற நடடிக்கை மேற்கொள்ளலாம்.

‘புகைப்பிடிப்பது உடலுக்கு கேடு; புற்று நோயை உண்டாக்கும், உயிரைக் கொல்லும்’ என்று எச்சரித்தால் மட்டும் போதாது. அந்தக் கொடிய பழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பொதுமக்களைக் குறிப்பாக இளைஞர்களை மீட்க வேண்டியது அரசின் கடமை.

சிகரெட்டுக்கு தடைச்சட்டம் கொண்டு வரப்படுமா?

படிக்க வேண்டும்

spot_img