fbpx
Homeபிற செய்திகள்கோயம்புத்தூர் வீடுகள் கண்காட்சி திருவிழாவில் நவீன்’ஸின் பிரீமியம் குடியிருப்புத்திட்டம் அறிமுகம்

கோயம்புத்தூர் வீடுகள் கண்காட்சி திருவிழாவில் நவீன்’ஸின் பிரீமியம் குடியிருப்புத்திட்டம் அறிமுகம்

சென்னையின் மிகவும் நம்பகமான ரியல் எஸ்டேட் நிறுவனங்க ளில் ஒன்றான நவீன்’ஸ் கோயம்புத்தூர் கொடி சியா வர்த்தக வளாகத்தில் மே 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் மாபெரும் ‘பிராப்பர்டி ஃபெஸ்டிவல்’ (வீடுகள் கண்காட்சி) நிகழ்வில் பங்கேற்றுள்ளது. அரங்கு எண் PF 14-இல், நவீன்’ஸ் நிறுவனம் தனது பிரீமியம் குடியிருப்புத் திட்டங்களைக் கோயம்புத்தூர் மக்களுக்காகக் காட்சிப்ப டுத்தியுள்ளது.

இந்தப் பிராப்பர்டி ஃபெஸ்டிவலில், வாடிக்கை யாளர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், உடனடியாகக் குடியேறத் தயாராக உள்ள வீடுகள், பிரீமியம் மற்றும் சொகுசு வசதிகள் கொண்ட ஆடம்பரக் குடியிருப்பு திட்டங்களை நவீன்’ஸ் நிறுவனம் காட்சிப்படுத்த உள்ளது. இதில் நவீன்’ஸ் ஓம் க்ருஹா – காலேஜ் ரோடு சென்னை, நவீன்’ஸ் ஆன் தியா போயட்ரி – ஜே.பி. நகர் பெங்களூரு, நவீன்’ஸ் ஸ்டார்வுட் டவர்ஸ் 3.0 மேப்பிள் மேடவாக்கம் சென்னை, நவீன்’ஸ் ஸ்டார் வுட் டவர்ஸ் சிடார் மேடவாக் கம் சென்னை, நவீன்’ஸ் பேவியூ ப்ரைவ் பெசன்ட் நகர் சென்னை, நவீன்’ஸ் விஜயஸ்ரீ அண்ணா நகர் சென்னை, நவீன்’ஸ் மயூரா கார்டன்ஸ் வளசரவாக்கம் ஆகிய முக்கிய திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தக் கண்காட்சி குறித்து நவீன்’ஸ் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு பொது மேலாளர் சீனிவாசன் கூறியதாவது: நவீன்’ஸ் நிறுவனம் பல ஆண்டுகளாக வாடிக்கை யாளர்களின் நன் மதிப்பையும் நம்பிக்கை யையும் தொடர்ந்து பெற்று வருகிறது. நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட குடியிருப்புகள், பிரீமியம் வாழ்க்கை அனுபவம் மற்றும் முழுமையான வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றின் மூலம் ஒவ்வொரு முதலீட்டையும் பாதுகாப்பானதாகவும், சிர மமற்றதாகவும், எதிர்காலத் தேவைக்கு ஏற்றதாகவும் மாற்றுவதே எங்கள் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img