fbpx
Homeபிற செய்திகள்டாக்டர் என்.ஜி.பி.கல்வியியல் கல்லூரியில் தேசியக் கல்விக் கொள்கை கருத்தரங்கு

டாக்டர் என்.ஜி.பி.கல்வியியல் கல்லூரியில் தேசியக் கல்விக் கொள்கை கருத்தரங்கு

கோவை, டாக்டர் என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரியில், ‘தேசியக் கல்விக் கொள்கை 2020: ஆசிரியர் கல்வியில் வாய்ப்பு களும் சவால்களும்’ என்ற பொருண்மையில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. கோவை மருத்துவ மைய மருத்துவ மனை தலைவர் மருத்துவர் நல்லா.ஜி.பழனிசாமி தலைமை தாங்கினார்.

கல்லூரி செயலர் மருத்துவர் தவமணி தேவி பழனிசாமி குத்துவிளக்கேற்றி, கருத்தரங்கை தொடங்கிவைத்தார்.
கல்லூரி முதல்வர் முனைவர் கா.ரா.ராமசாமி வரவேற்றார்.

மைசூரு, மண்டல கல்வியியல் நிறுவனத்தின் கல்வியியல் துறை பேராசிரியர் முனைவர் கல்பனா வேணுகோபால், தேசியக் கல்விக் கொள்கையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். தற்கால நடைமுறைக்கு ஏற்ப ஆசிரியர் கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி விளக்கினார்.

திண்டுக்கல் காந்தி கிராம் கிராமிய பல்கலைக் கழகத்தில் கல்வியியல் துறை மேனாள் பேராசிரியர் முனைவர் எம். ஏ.சுதிர், கோவை அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் உயர்கல்வி நிறுவனத்தின் கல்வியியல் துறை புல முதன்மையர் பேராசிரியர் ஜி. விக்டோரியா நவோமி ஆகியோர் கருத்துரைகளை வழங்கினார்.

டாக்டர் என்.ஜி.பி. கல்வி நிறுவனங்களின் கல்விசார் இயக்குநர் முனைவர் பெ.இரா.முத்துசாமி நிறைவுரை ஆற்றினார்.
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ். புவனேஸ்வரி கருத்தரங்க அறிக்கை வாசித்தார்.

கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் மருத்துவர் அருண் ந.பழனிசாமி, தொழில் மேம்பாட்டு நிறுவன இயக்குனர் மதுரா வி.பழனிசாமி, முதன்மை செயல் அலுவலர் முனைவர் ஓ.டி. புவனேஸ்வரன், முதுநிலை நிர்வாக அலுவலர் முனைவர் எம். நடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பல்வேறு கல்லூரிகளில் இருந்து பேராசிரியர்கள், மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img