fbpx
Homeபிற செய்திகள்ஒரே வாரத்தில் 2 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி நறுவீ மருத்துவமனை...

ஒரே வாரத்தில் 2 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி நறுவீ மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

கல்லீரல் பாதிக்கப்பட்டு செயலிழந்த இரண்டு நோயாளி களுக்கு ஒரே வாரத்தில் வேலூர் நறுவீ மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.

இது குறித்து மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி.சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது: அமெரிக்க நாட்டின் புகழ்பெற்ற ஹென்ரி போர்டு மருத்துவ தொழில்நுட்ப நிறுவனத்தின் கூட்டு முயற்சியுடன் வேலூரில இயங்கி வரும் நறுவீ மருத்துவமனையில், ஒரே வாரத்தில் இருவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இம் மருத்துவமனை தொடங்கப்பட்டு இரண்டு ஆண் டுகள் கடந்துள்ள நிலையில், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கென்யா, சூடான், மாலத்தீவுகள், மியான்ர், வங்காளதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும், தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பல்வேறு விதமான அறுவைச் சிகிச்சைகள் இங்கு செய்யப்பட்டுள்ளன.

தொடங்கப்பட்டு குறுகிய காலத்தில், இருதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் உறுப்பு மாற்று அறுவைச்சிக்சை செய் வதற்கான அங்கீகாரத்தை தமிழக அரசு வழங்கி உள்ளது.

தற்போது, கல்லீரல் பாதிக் கப்பட்டு செயலிழந்த இருவருக்கு ஒரே வாரத்தில் கல்லீரல் மாற்று அறுவைச்சிக்சை செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அறுவைச்சிகிச்சை செய்து கொண்ட இருவரில் பெங்களூரைச் சேர்ந்த 24 வயதுடைய ஸ்மிதா என்ற பெண் பல ஆண்டுகளாக கல்லீரல் செயலழிந்து அவதியுற்று வந்தார்.

இவருக்கு இவரது தாயார் ராஜாத்தி கல்லீரல் தானம் செய்துள்ளார். இருவரும் சிகிச்சைக்குப் பின் நலமாக உள்ளனர். மற்றொரு நோயாளியான 63 வயது ரவீந்திரன், வேலூர் பகுதியைச் சேர்ந்தவர். இவரது மனைவி சாந்தி இவருக்கு கல்லீரல் தானம் செய்துள்ளார். இருவரும் நலமுடன் உள்ளனர்.
இவர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவைச்சிக்சை செய்ய 7 முதல் 8 மணி நேரம் ஆனது.

உடல் உறுப்பு தானம் செய்பவர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்களின் ரத்த சம்பந்தமான உறவு முறை உள்ளவர்களால் மட்டுமே உறுப்பு தானம் செய்ய முடியும். அரசின் விதிமுறைப்படி மற்றவர்கள் யாரும் உறுப்பு தானம் செய்ய முடியாது.

மது அருந்துவது, சுகாதா ரமான உணவு மற்றும் குடிநீர் பயன்படுத்தாமல் இருப்பது, கொழுப்பு சத்துமிக்க உணவை அதிகம் உண்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது உள்ளிட்டவை கல்லீரல் பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமைகிறது.

அங்கீகார சான்றிதழ்

குறுகிய காலத்தில் NABH எனப்படும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார சேவைக்கான தேசிய அங்கீகார வாரியம் வழங்கும் அங்கீகார சான்றிதழ், மருத்துவ உபகரணங்களை தொற்று இல்லாமல் சுகாதார முறையில் பராமரிப்பு செய்வதற்கான CAHO எனப்படும் மருத்துவ சேவை கூட்டமைப்பின் அங்கீகார சான்றிதழ் ஆகியவற்றை நறுவீ மருத்துவமனை பெற்றுள்ளது என்றார் ஜி.வி.சம்பத்.

அறுவைச்சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகள் நிருபர்கள் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டனர். மருத்துவமனைத் துணைத் தலைவர் அனிதா சம்பத், செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன், பொது மேலாளர் நித்தின் சம்பத் ஆகியோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img