fbpx
Homeபிற செய்திகள்கொல்லிமலை ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகள்: செய்தியாளர்களுடன் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் ஆய்வு

கொல்லிமலை ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகள்: செய்தியாளர்களுடன் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் ஆய்வு

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நத்துக்குழிபட்டி, குண்டூர் நாடு, செம்மேடு, பூங் குளம்பட்டி, பெரு மாப்பட்டி ஆகிய கிராமங்க ளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட் சியர் ஸ்ரேயா பி.சிங் செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம், நத்துக்குழிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் 210 மீட்டர் நீளத்திற்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி நடக்கிறது.

நத்துக்குழிபட்டி கிரா மத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.20 லட்சம் மதிப்பீட்டில் நாற்றாங்கால் அமைக்கப்பட்டுள்ளது.
பூங்குளம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.2.60 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

மதிய உணவு சமையல் கூடம் அமைக்கும் பணி

ரூ.5.32 லட்சம் மதிப்பீட்டில் மதிய உணவு சமையல் கூடம் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. கொல்லிமலை செம்மேட்டில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் உணவகத்துடன் கூடிய தேநீரகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நத்துக்குழிபட்டி அரசு உயர் நிலைப்பள்ளி சமையல் கூடம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். பணிகளை குறிப்பிட்ட ஒப்பந்த காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

கொல்லிமலை பெருமாபட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரிட் சாலை அமைக் கபட்டுள்ளதையும் ஆட் சியர் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனபால், சரவணன் உள்ளிட்டோர் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img