நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் மற்றும் போதைப் பொருள் தடுப்புக் குழு ஆகியவற்றின் சார்பில் “போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடைப் பயணம்” நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் மு.ராஜேஸ்வரி அவர்கள் தலைமை வகித்தார்.
65 மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்ற இந்த போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடைப்பயணம், கல்லூரி நுழைவு வாயிலில் தொடங்கி, லத்துவாடி வரை சென்று, பின்னர் மீண்டும் கல்லூரி நுழைவு வாயிலில் நிறைவடைந்தது.
இந்த போதைப்பொருள் ஒழிப்பு நடைப்பயண விழிப்புணர்வின் போது, போதைப்பொருள் பயன் படுத்துவதால் நுரையீரல் புற்றுநோய், சுவாசக் கோளாறுகள், இருதய நோய்கள், பக்கவாதம், உதடு, நாக்கு, ஈறு, தொண்டைப் புற்றுநோய் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்றும், மேலும் மனநல பாதிப்பு, மனச்சோர்வு, கவலை போன்ற பிரச்சினைகளும் தோன்றுகின்றன என்றும், அதோடு போதைப்பொருள் பயன்பாட்டின் விளைவாக வேலை இழப்பு, குடும்பச் சிக்கல்கள், குற்றச்செயல்களில் ஈடுபடுதல் போன்ற சமூகப் பிரச்சினைகளும் உருவாகின்றன என்றும், மேலும் போதைப் பொருளை
தவிர்த்தால் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழலாம் என்றும் வலியுறுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப் பட்டன. முன்னதாக இருபால் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் போதைப் பொருள் பயன் பாட்டை தவிர்ப்பதற்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மோகனூர் சிறப்பு காவல் உதவியாளர் ஜெயச் சந்திரன், விலங்கியல் துறைத் தலைவர் இராஜசேகர பாண்டியன், போதைப்பொருள் தடுப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பார்வதி மற்றும் உறுப்பினர் ராஜ்குமார், துறைத் தலைவர்கள், பேராசி ரியர்கள், ஆசிரியரல்லா அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் சந்திரசேகரன் செய்திருந்தார்.



