லூப்ரிகேஷன் டெக்னாலஜி கண்டுபிடிப்புகளில் முன்னிலை வகிக்கும் மொபில் ஜிவி பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹ்ரித்திக் ரோஷனை அதன் புதிய பிராண்ட் அம்பாசடராக அறிவித்துள்ளது. எக்ஸான்மொபில் லூப்ரிகண்ட்ஸ் பிரைவேட் உடைய தலைமை நிர்வாக அதிகாரி விபின் ராணா கூறியதாவது:
இந்தியாவில் மொபில் லூப்ரிகண்ட்களுக்கு ஹ்ரித்திக் ரோஷனுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்தியாவின் லூப்ரிகேஷன் தேவைகளை மொபில் சிறப்பாக பூர்த்தி செய்யும் என்கிற வர்த்தக கூட்டா ளர்கள் மற்றும் நுகர்வோரின் நம்பிக்கையை, இவ ரது பண்பும், ஆளுமையும் பிரதிபலிக்கும் என்று நம்புகி றோம் என்றார்.
நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் கூறுகையில், உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட மொபில் மற்றும் அதன் நம்பகமான பிராண்ட் பெயருடன் இணைவதை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
மக்கள் வாழ்விலும் சமூகத்திலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, நம்பிக் கையே சாம்பியன்களின் உண்மையான உந்து சக்தியாக இருக் கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
இதுவே மொபில் பிராண்ட் பற்றிய எனது பிரதிபலிப்பாகும் என்றார்.ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, தொழில்நுட்பத் தலைவராகவும் நம்பகமான கூட்டாளராகவும், மொபில் உலகின் லூப்ரிகேஷன் தேவைகளுக்கு சேவை செய்து வருகிறது.
மொபில் தயாரிப்புகள் நுகர் வோருக்கு அவர்களின் கார்கள், டிரக்குகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான சிறந்த இயந்திர செயல்திறன் மற்றும் பாது காப்பைப் பெற உதவும் வகையில் வடிவ மைக்கப்பட்டுள்ளன.
வணிகங்களுக்கு, உலகெங் கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு – மற்றும் ஒவ்வொரு தொழிற்துறையிலும் – செலவுகளைக் குறைக்கவும், உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் மற்றும் உபகரணங்க ளின் செயல்திறனை அதிகரிக்கவும் மொபில் உதவுகிறது.