fbpx
Homeபிற செய்திகள்சிறுபான்மையர் தின விழாவில் அமைச்சர்களிடம் கோரிக்கை மனு

சிறுபான்மையர் தின விழாவில் அமைச்சர்களிடம் கோரிக்கை மனு

கோவை நிர்மலா மகளிர் கலை கல்லூரியில் சிறுபான்மையர் தினம் அரசு விழாவாக நடை பெற்றது. இதில் அமைச்சர் கள் செஞ்சி மஸ்தான், சு.முத்துசாமி, சிறுபான்மை கழகத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறுபான்மையர் நலத்திட்டங்களை அறிவித் தனர். அந்த நிகழ்வில் கோவை 87 வது வார்டு கூட்டமைப்பு தலைவர் உமர் ஹாஜியார், ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் செயலாளர் அப்துல் ஹக்கீம், அன்னம் நாயக்கர் ஒருங்கிணைந்த சங்கங்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இறுதியில் அமைச்சர் கள் உள்ளிட்டோரிடம் 87, 86 வது வார்டு கூட் டமைப்பினர் மனு அளித் தனர். மேலும் அமைச்சர் முத்துசாமி, அடுத்த வாரம் நேரில் சந்திக்க அழைப்பு கொடுத்துள்ளதாக ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் செயலாளர் அப்துல் ஹக் கீம் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img