Homeபிற செய்திகள்கொடிசியாவில் நுகர்வோர் கண்காட்சி டிசம்பர் 23ம் தேதி தொடங்குகிறது

கொடிசியாவில் நுகர்வோர் கண்காட்சி டிசம்பர் 23ம் தேதி தொடங்குகிறது

கோவை கொடிசியா அரங்கில் ஒன்பதாவது நுகர்வோர் கண்காட்சி வருகிற 23ஆம் தேதி தொடங்கி ஜனவரி 1ஆம் தேதி முடிய 10 நாட்கள் நடக்கிறது.
இது குறித்து கொடிசியா தலைவர் வி.திருஞானம் செயலாளர் ஆர்.சசிகுமார். கோயம்புத்தூர் ஷாப்பிங் பெஸ்டிவல் 2023தலைவர் என். ராஜேந்திரன், உதவி தலைவர் நந்தகோபால் ஆகியோர் கூறியதாவது:-

கோவை – அவிநாசி ரோட்டில் உள்ள கொடிசியா தொழில் காட்சி வளாகத்தில் வருகிற 23ஆம் தேதி கோயம்புத்தூர் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2023 என்ற பெயரில் மாபெரும் நுகர்வோர் கண்காட்சி தொடங்குகிறது.

இந்த கண்காட்சி ஜனவரி 1ஆம் தேதி முடிய 10 நாட்கள் நடக்கிறது. இந்த கண்காட்சி ஒரு லட்சத்து 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில்280 க்கும் மேற்பட்ட நுகர்வோர் அரங்குகள் இடம் பெற்றுள்ளன.

இந்த ஆண்டு சிறப்பு அம்சமாக நடிகர் கே.பாக்கியராஜ் குழுவினர் பங்கேற்கும் பட்டிமன்றம், லட்சுமன் ஸ்ருதி குழுவினர் இன்னிசை, சூப்பர் சிங்கர் முகேஷ் ஷையத் வானதி பங்குபெரும் இன்னிசை, மேஜிக் ஷோ உற்பட ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

இந்த கண்காட்சியில் வீட்டு உபயோக சாதனங்கள், பர்னிச்சர் வகைகள், நவீன ஆடை வகைகள், தங்கம் – வைரம் நகை அரங்குகள், நிதி நிறுவன அரங்குகள், கைவினைபொருள்கள் அரங்குகள் உள்பட 280 க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெறுகிறது.

இந்த கண்காட்சி தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.
மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img