இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜுன். 3, மகளிர் சுய உதவிக் குழு தினவிழாவினையொட்டி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 656 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ரூ.68.18 கோடி மதிப்பீட்டிலான வங்கி கடன் இணைப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா, ஆற்காடு எம்.எல்.ஏ. ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) ரவிச்சந்திரன், ஒன்றியக்குழுத் தலைவர்கள் வாலாஜா வெங்கட்ரமணன், ஆற்காடு திருமதி. புவனேஸ்வரி சத்தியநாதன், திமிரி அசோக், திருமதி.அனிதா குப்புசாமி, நிர்மலா சௌந்தர், நகரமன்ற தலைவர்கள், இராணிப்பேட்டை சுஜாதா வினோத், ஆற்காடு தேவி பென்ஸ் பாண்டியன், சோளிங்கர் தமிழ்ச்செல்வி அசோகன், பேரூராட்சி தலைவர் ரேணுகா தேவி சரவணன், உதவி திட்ட அலுவலர்கள் சிவகுமார், அன்பரசன், சம்பத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



