நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டத்திற்கான “வருவாய் தீர்வாயம்“ இரண்டாம் நாள் நிகழ்ச்சி குன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் நடை பெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.20,000/- மதிப்பீட்டில் புதிய குடும்ப அட்டைகளையும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு ஈமச்சடங்கு உதவிதொகை பெறுவதற்கான ஆணையையும், தாட்கோ மூலம் 2 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவு திட்டத்தின் கீழ் சுற்றுலா வாகனம் வாங்குவதற்கும் மற்றும் ஜெராக்ஸ் கடை வைப்பதற்கும் கடன் உதவி பெறுவதற்கான செயல்முறை ஆணைகள் என மொத்தம் 7 பயனாளிகளுக்கு ரூ.9.31 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 222 மனுக்களை பெற்று கொண்டு அந்த மனுக்களை துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை மேற் கொள்ள அறிவுறுத்தினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர், குன்னூர் வட்டாட்சியர் அலுவல கத்தில் வைத்து, மேலூர் உள்வட்டத்திற்குட்பட்ட உலிக்கல் 1, 2, உபதலை, மேலூர் 1, 2, 3 ஆகிய வருவாய் கிராமங்களில் பராமரிக்கப்படும் பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
குன்னூர் வட்டத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச் சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் பழனிசாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதானந்த கல்கி, நகராட்சி ஆணையாளர் இளம் பரிதி, மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணா தேவி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் குப்பு ராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஞானராஜ், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் நவனீதா, குன்னூர் வட்டாட்சியர் ஜவஹர், தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) காயத்ரி, தாட்கோ மேலாளர் ஆர்னி பேர்ள், குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர் உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.