கலைஞர் பெயரில் பல்கலைக் கழகம் அமைக்க முதல்வருடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்தார்.
ஈரோடு சி.என்.கல்லூரியை அவர் இன்று வீட்டு வசதி அமைச்சர் முத்துசாமியுடன் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம்
கூறியதாவது:
தமிழக முதலமைச்சர் சி.என்.கல்லூரியை அரசு கல்லூரி ஆக்க முடிவெடுத்து தமிழக சட்டமன்றத்தில் தீர் மானம் கொண்டு வந்தார். அது ஜனாதிபதி ஒப்புதல் பெற்றுள்ளது. இந்த இடத்தில் ஐஏஎஸ் அகாடமி உள் விளை யாட்டு அரங்கம் மற்றும் நூலகம் அமைக்க முதல்வர் அறிவிப்பு செய்துள்ளார். அது சம்பந்தப்பட்ட தகவல்களை ஆய்வு செய்ய என்னை பணித்தார். அதன்படி இன்று ஆய்வு செய்து உரிய அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு விரைவில் திட்டங்கள் நிறைவேற் றப்படும்.
உயர் கல்வியைப் பொருத்த வரை தமிழகம் இந்தியாவிலேயே முன் னோடியாக திகழ முதல்வர் பல நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால் ஆளுநர் அதற்கு முட்டுக்கட்டை போடுவது போல் செயல்ப டுகிறார். சமீபத்தில் பல்கலைக் கழக மானிய குழு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அது மாநி லங்களுக்கு எதிராக உள்ளது. எனவே தமிழக முதல்வர் கேரளா ஆந் திரா முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மக்கள் மன்றத்திலும் சட்ட மன்றத்திலும் நீதிமன்றத்திலும் அந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம். விரைவில் அதில் வெற்றி பெறுவோம்.
வரும் ஏப்ரல் மாதம் பல் கலைக்கழக ஆசிரியர்கள் தகுதி தேர்வு செட் நடைபெற உள் ளது. ஒவ்வொரு வருடமும் 6 மாதத்துக்கு ஒரு முறை அத்தேர்வு நடைபெறும். அதன் பிறகு பல்கலைக்கழக ஆசிரியர்கள் பணி நியமனம் சம்பந்தமான தேர்வு நடைபெற உள்ளது.
சுமார் 4000 பேரா சிரியர்களை வரும் ஜூன் மாதம் நியமிக்க உள்ளோம். அதை தவிர 1000 கௌரவ விரிவுரையாளர்களை நிரந்தரப் படுத்த திட்டமிட்டுள்ளோம். அவர்க ளுக்கான சம்பளம் கூட முதல் வரால் உயர்த்தப்பட்டது.
ஈரோட்டில் உள்ள பாரதி யார் பல்கலைக்கழக முதுகலை ஆராய்ச்சி மையத்தை மூட திட்டமிடவில்லை. இது சம்பந்தமாக பெரியார் பல்க லைக்கழக துணை வேந் தருக்கு எதிரான குற்றச்சாட் டுகள் நீதிமன்றத்திலும் காவல் துறையாலும் விசாரிக்கப்படுகின்றன. எனவே அது குறித்து கருத்து கூற முடியாது.
கலைஞர் பெயரில் பல் கலைக்கழகம் அமைக்க முதல் வருடன் கலந்து ஆலோசிக்கப் படும். இவ்வாறு அவர் கூறினார்.
ராஜ்யசபா எம்பி அந்தியூர் செல்வராஜ் ஈரோடு எம்பி பிரகாஷ் மாநகர திமுக செய லாளர் சுப்ரமணியம் துணை மேயர் செல்வராஜ் கலெக்டர் ராஜகோபால் சுங்காரா உட்பட பலர் உடன் இருந்தனர்.



