வெஸ்பா மற்றும் ஸ்போர்ட்டி அப்ரிலியா ஸ்கூட்டர்களின் தயாரிப்பாளரும் இத்தாலிய பியாஜியோ குழுமத்தின் 100% துணை நிறுவனமான பியாஜியோ வெஹிக்கிள்ஸ் பிரைவேட் லிமிடெட், வெஸ்பா SXL வகைகளில் நான்கு புதிய துடிப்பான வண்ணங்களை அறிமுகப்படுத்துகிறது.
இந்த புதிய வண்ணங்கள் மிட்நைட் டெசர்ட், டஸ்கனி சன்செட், ஜேட் ஸ்ட்ரீக் மற்றும் சன்னி எஸ்கேபேட் ஆகும். மிட்நைட் டெசர்ட், டஸ்கனி சன்செட், சன்னி எஸ்கேபேட் ஆகிய புதிய வண்ணங்களில் புதிய வரையறுக்கப்பட்ட பதிப்பு வெஸ்பா SXL ஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்படுகிறது.
வெஸ்பா SXL ரேசிங் 60கள் தற்போதுள்ள வெள்ளை நிறத்திற்குக் கூடுதலாக, ஜேட் ஸ்ட்ரீக் என்னும் புதிய நிறத்திலும் கிடைக்கும். நிலையான வெஸ்பா SXL மாடல்கள் இப்போது மிட்நைட் டெசர்ட் மற்றும் டஸ்கனி சன்செட் ஆகிய இரண்டு புதிய வண்ணங்களிலும் கிடைக்கும்.
பியாஜியோ வெஹிக்கிள்ஸ்
பியாஜியோ வெஹிக்கிள்ஸ் பிரைவேட். லிமிடெட், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் டியாகோ கிராஃபி கூறியதாவது:
எங்கள் இந்திய வாடிக்கையாளர்களிடமிருந்து அமோக வரவேற்பைப் பெற்ற பிறகு, வெஸ்பாவை புத்துணர்ச்சியூட்டும் ஸ்டைலுடனும், துடிப்புடனும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
வெஸ்பா ஒரு ஸ்கூட்டர் மட்டுமல்ல, இத்தாலிய வாழ்க்கை முறை மற்றும் இந்தியாவிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்ற பாரம்பரியத்தின் சின்னமாகும். வெஸ்பாவின் புதிய வண்ணத் தொகுப்புகள் மூலம், வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் ஆளுமைக்கு ஏற்ற சிறந்த மாறுபாட்டைத் தேர்ந்தெடுப்பதற்கும், எங்கள் ரைடர்களை பிரமிக்க வைக்கும் புதிய சவாரி அனுபவத்தை வழங்குவதற்கும் ஏராளமான தேர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்றார்.



