fbpx
Homeபிற செய்திகள்கோவை யூனியன் பேங்க் ஆப் இந்தியா பிராந்திய அலுவலகத்தில் குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி நடத்தி ‘யூனியன் முஸ்கான்’...

கோவை யூனியன் பேங்க் ஆப் இந்தியா பிராந்திய அலுவலகத்தில் குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி நடத்தி ‘யூனியன் முஸ்கான்’ திட்ட விழிப்புணர்வு

யூனியன் பேங்க் ஆப் இந்தியா, குழந்தைகளுக்காக ‘யூனியன் முஸ்கான்’ என்ற சிறப்பு சேமிப்பு வங்கிக் கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கான சேமிப்புப் பழக்கம் மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

இந்த திட்டம் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தி அதிகளவில் வாடிக் கையாளர்களை சேர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை யூனியன் பேங்க் ஆப் இந்தியா முன்னெடுத்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக கோவை அவினாசி சாலை யூனியன் பேங்க் ஆப் இந்தியா பிராந்திய அலுவலகத்தில் ‘யூனியன் முஸ்கான்’ திட்டத்தில் இணைந்துள்ள வாடிக்கையாளர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப் பட்ட 25 வாடிக்கையாளர்களின் குழந்தைகளுக்கு ‘யூனியன் முஸ்கான்’ மற்றும் சேமிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில் சுமார் நான்கு வயது முதல் 10 வயது வரையிலான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

பின்னர் நடந்த நிகழ்ச்சியில் வங்கியின் பிராந்திய தலைவரும், துணைப் பொது மேலாளருமானன ரெஞ்சித் சுவாமிநாதன் பேசியதாவது:
கோவை மாவட்டத்தில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் அறுபது கிளைகளிலும் யூனியன் முஸ்கான் திட்டத்தை தொடங்கி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதில் வாடிக்கையாளர்கள் அதிகளவில் இணைந்து வருகின்றனர். குழந்தைகளுக்கான சேமிப்புக் கணக்காக உள்ள இந்த யூனியன் முஸ்கான் திட்டம் மூலம் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகி கல்லூரி செல்வது வரை அவர்களது கல்வி கடன், இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு வங்கிச் சேவைகள் கிடைக்கும்.

இந்த திட்டத்தில் தங்களது குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும்.உங்களுக்கு சேவை செய்ய யூனியன் பேங்க் இந்தியா காத்திருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், துணை பிராந்திய தலைவர்கள் மற்றும் உதவிப் பொது மேலாளர்கள் கோபால் ராவ், ரவீந்திரன் உட்பட வங்கி அதிகாரிகள், பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img