வேடிக்கை மூலம் அச்சத்தை வெல்வோம் என்ற பெயரில் புற்றுநோய் மீதான விழிப்புணர்வை எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டி டியூட் நடத்தியது.
இந்நிகழ்வில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 500க்கும் கூடுதலான மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.
எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் புற்று நோயியல் சேவைகள் துறையின் இயக்குநர் டாக்டர் எம்ஏ ராஜா, இந்த இருநாள் நிகழ்வை தொடங்கி வைத்தார்.
புற்றுநோய், அதன் இடர்காரணிகள், வராமல் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் ஆரம்ப நிலையிலேயே பாதிப்பை கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நிகழ்வு இருந்தது.
இது குறித்து எம்ஜிஎம் ஹெல்த்கேர் குழுமத்தின் இயக்குநர் டாக்டர்.அர் ஜிதா ராஜகோபாலன் பேசுகையில், “புற்றுநோய் மீதான அச்சத்தை ஒழிக்க எம் ஜிஎம் கேன்சர் இன்ஸ் டிடியூட் நடத்தி வரும் தளராத யுத்தத்தின் இரு ஆண்டுகள் நிறைவை நாங்கள் கொண்டாடி வருகிறோம்“ என்றார்.
எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் புற்றுநோயியல் சேவைகள் துறையின் இயக்குனர் டாக்டர் எம்ஏ ராஜா கூறியதாவது: தொடக்க நிலையிலேயே கண்டறிவதில் புற்றுநோய் வந்த நபர்களுக்கு உயிர் பிழைப்பு விகிதங்களை கணிசமாக மேம்படுத்தி லட்சக்கணக்கான நபர்களுக்கு நம்பிக்கையை வழங்கியிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழிப்புணர்வு கொண்டாட்ட நிகழ்வில் வீடியோ காட்சிப்பிரிவு பார்வையாளர்களை அதிகம் கவர்ந்தது.