ஜெ.எஸ்.டபிள்யு எம்.ஜி மோட்டார் இந்தியா, அதன் MY2025 பதிப்பின் மூலம் ‘தி பிளாக்பஸ்டர் எஸ்யுவி’ என்ற பெயரில் எம்.ஜி ஆஸ்டருக்கான புதிய நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
ஆஸ்டர் ‘பிளாக்பஸ்டர் எஸ்யுவி’ அதன் MY2025 பதிப்பின் மூலம் விவேகமுள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் ஆரம்பகால பயனர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. அதன் புதிய ஷைன் வேரியண்டுடன் ரூ.12.5 லட்சத்திற்குள் செலக்ட் வேரியண்டில் ஆறு ஏர்பேக்குகள் மற்றும் பிரீமியம் ஐவரி லெதரெட் இருக்கைகளுடன் வருகிறது.
இது மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் வசதிக்காக எஸ்யுவி ஆர்வலர்கள் அருகிலுள்ள ஜெ.எஸ்.டபிள்யு எம்.ஜி மோட்டார் இந்தியா டீலர்ஷிப்களுக்குச் சென்று ‘தி பிளாக்பஸ்டர் எஸ்யூவி’யை ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் விசாரித்து முன்பதிவு செய்யலாம்.
இது குறித்து எம்.ஜி.மோட்டார் இந்தியாவின் விற்பனை மற்றும் செயல்பாட்டு இயக்குநர் ராகேஷ் சென் கூறுகையில், “ஒரு புதிய தைரியமான நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு, சரியான எஸ்யூவியை தேடும் ஆரம்பகால தத்தெடுப்பாளர்களுக்கு எம்.ஜி அஸ்டர் சரியான கார்.
‘தி பிளாக்பஸ்டர் எஸ்யூவி’ 50க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது. பிரீமியம் உட் புறங்கள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை மறக்கமுடியாத ஓட்டுநர் அனுபவத்தை புதிய அளவிலான வசதிக்கு உயர்த்துகின்றன.
மகிழ்ச்சிகரமான ஓட்டுநர் அனுபவத்துடன் இணைக்கப்பட்ட பல அம்சங்களுடன், எம்.ஜி ஆஸ்டர் தனிப்பட்ட ஏ.ஐ உதவியாளர் மற்றும் 14 மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகள் அம்சங்களைப் பெற்ற இந்தியா வின் முதல் எஸ்யூவி ஆகும்“ என்றார்.



