fbpx
Homeபிற செய்திகள்பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் முன்னேற்றம் சங்கத் மாநில பொதுக்குழு கூட்டம்

பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் முன்னேற்றம் சங்கத் மாநில பொதுக்குழு கூட்டம்

மேட்டுப்பாளையத்தில், தமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்கு டியினர் நலத்துறை ஆசி ரியர் காப்பாளர் முன் னேற்றம் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மேட்டுப்பாளையம் அருகே வேளாங்கண்ணி பகுதியில் நடந்தது.

இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் முன்னேற்றம் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண் டனர்.

விழாவில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசுகையில், ஆசிரியர்கள், காப்பாளர்கள், எவ்வளவு முக்கியமோ, அதே அளவு மாணவர்களும் முக்கியம். உங்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும்.

தனியார் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் செய்யும் பணிக்கும், அரசு பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் செய்யும் பணிக்கும் வித்தியாசம் உள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், விடுதிகளின் மேம்பாட்டிற்காக பராமரிப்புத் தொகை உயர்த்தி கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img