மார்க்கெட் ஆஃப் இந்தியா – எஸ்பிஆர் சிட்டி இணைந்து இரு நாட்கள் நடத்திய ‘நேட்டிவ் இந்தியா’ திருவிழாவில் 20,000-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
நம் நாட்டு கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்குரிய ஆடை அணிகளும், ஆர்கானிக் (இயற்கை சாகுபடி) முறையில் தயாரிக்கப்பட்ட விளைபொருட்களை 150-க்கும் அதிகமான ஸ்டால்கள் விற்பனை செய்தன.
‘கோ நேட்டிவ், கோ ஆர்கானிக், கோ நேச்சுரல்’
‘கோ நேட்டிவ், கோ ஆர்கானிக், கோ நேச்சுரல்’ (உள்நாட்டு பொருட்களை, இயற்கை சாகுபடி விளைபொருட்களை ஆதரிப்போம், இயற்கையோடு இசைந்து வாழ்வோம்) என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட இத்திருவிழாவில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள் அவர்களது ஆர்கானிக் உணவுப் பொருட்களையும், லைஃப்ஸ்டைல் தயாரிப்புகளையும் மற்றும் தங்களது தனித்துவமான கைவினைத்திறனை வெளிப்படுத்துகின்ற கலைப்பொருட்களையும் காட்சிப்படுத்தி விற்பனை செய்வதற்கு ஒரு மிகச்சிறந்த தளமாக இருந்தது.
முனுசாமி, நாகரத்தின நாயுடு, கு. சிவராமன் ஆகியோர் உரையாற்றினர்.
ஹிப்னாட்டிஸம் என்ற மனவசிய சிகிச்சை முறை, நாடி பயிற்சி, ரிதமிக் யோகா ஆகியவை மீதான பயிலரங்குகளும் இடம்பெற்றிருந்தன.
இந்நிகழ்வில், 30 உணவு ஸ்டால்கள் உட்பட மொத்தத்தில் 150-க்கும் அதிகமான ஸ்டால்கள் இடம்பெற்றிருந்தன.
இத்திருவிழா, பாரம்பரியத்தையும், இயற்கை சாகுபடியையும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் கைவினைக் கலைஞர்களின் சிறப்பான கலை படைப்புகளையும், தயாரிப்பு பொருட்களையும் ஆதரிக்கும் வெற்றிகரமான நிகழ்வாக அமைந்தது.



